மாவட்ட செய்திகள்

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் - தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாணவ, மாணவிகள் போராட்டம் - ஊர்வலம் + "||" + Women condemn sexual assault - Dharmapuri, in Krishnagiri Students Struggle - Procession

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் - தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாணவ, மாணவிகள் போராட்டம் - ஊர்வலம்

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் - தர்மபுரி, கிருஷ்ணகிரியில் மாணவ, மாணவிகள் போராட்டம் - ஊர்வலம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரி, கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம், ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,

பொள்ளாச்சியில் மாணவிகள், பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்மபுரி சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று தர்மபுரி கல்லூரி வளாகத்தில் இருந்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அப்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடையவர்களை முறையான விசாரணை மூலம் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவ- மாணவிகள் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.

இதே போல கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் நவீனா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன் கண்டன உரையாற்றினார்.

இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தூக்கிலிட வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. இலவச பஸ்பாஸ் அட்டைகள் பறிமுதல் செய்ததை கண்டித்து: பஸ்சை சிறை பிடித்து கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
பொன்னேரி அடுத்த சோழவரத்தில் மாணவ- மாணவியரின் இலவச பஸ்பாஸ் அட்டையை டிக்கெட் பரிசோதகர்கள் பறிமுதல் செய்ததை கண்டித்து பஸ்சை சிறைபிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
2. பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை 10க்கும் மேற்பட்டவர்கள் வெறிச்செயல்
பாட்டி வீட்டில் வளர்ந்த 2 சிறுமிகள் 10க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுமிகளுக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
3. கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; ஒருவர் கைது
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
4. பாலியல் வன்கொடுமையை கண்டித்து, பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமையை கண்டித்து பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.