மாவட்ட செய்திகள்

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல், வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலி + "||" + Motorcycle clash on the cargo van, 2 people including a forest worker killed

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல், வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலி

சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல், வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலி
சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வனத்துறை ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
கூடலூர்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி ரோசாப்பூ கண்டம் பகுதியை சோந்தவர் சரத்குமார் (வயது 22). இவர், கேரள வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஷாஜூதீன் (22). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு குமுளியில் இருந்து கம்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அவர்கள், கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சரத்குமார் ஓட்டினார். பின்னால் ஷாஜூதீன் அமர்ந்திருந்தார். குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூரை அடுத்த பகவதி அம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது.

அப்போது, சாலையோரத்தில் நிறுத்தியிருந்த சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தலையில் பலத்த காயத்துடன் ஷாஜூதீன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே ஷாஜூதீன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லோயர்கேம்ப் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனம் மோதி சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட கம்பம் சேதம் அடைந்தது.
2. திருவொற்றியூரில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
திருவொற்றியூரில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி
பனவடலிசத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
4. ஜெயங்கொண்டம் அருகே பரிதாபம்: கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உள்பட 2 பேர் பலி - டிரைவருக்கு போலீசார் வலைவீச்சு
ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி ஏறியதில், முதியவர் உள்பட 2 பேர் பலியாயினர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ஆரல்வாய்மொழி அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல் - வாலிபர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-