மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி + "||" + Near Nellai Truck Toppling Worker kills

நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி

நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பலி
நெல்லை அருகே திருட்டு மணல் அள்ளி வந்த லாரி கவிழ்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பர்கிட் மாநகர் பகுதியை சேர்ந்த ரங்கராஜ் மகன் உய்க்காட்டான் (வயது 20) கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஒருவரும் நெல்லை அருகே உள்ள சீவலப்பேரி ஆற்றுக்கு சென்று லாரியில் மணல் அள்ளினர். இவர்கள் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. மணல் அள்ளி விட்டு லாரி நேற்று அதிகாலை கங்கைகொண்டான் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

மணலுக்கு மேல் உய்க்காட்டான் உட்கார்ந்து இருந்தார். சீவலப்பேரி அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியில் சென்று கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென்று கவிழ்ந்தது. இதில் மணலுக்குள் சிக்கிய உய்க்காட்டான் பரிதாபமாக இறந்தார். லாரி டிரைவர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மணலில் சிக்கி கிடந்த உய்க்காட்டானை போலீசார் மீட்டு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் மணல் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
2. நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேர் கைது மேலும் 6 பேருக்கு வலைவீச்சு; திடுக்கிடும் தகவல்கள்
நெல்லை அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ஆந்திர தொழில் அதிபரை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
4. நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேர் பற்றி உருக்கமான தகவல்கள்
நெல்லை அருகே விபத்தில் பலியான 5 பேரை பற்றிய உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.
5. நெல்லை அருகே மாட்டு வண்டி போட்டி
நெல்லை அருகே நடுவக்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.