மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி + "||" + I will contest in Perambalur parliamentary constituency

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கூறினார்.
பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த தொகுதி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிடுகிறது. ஆனால் வேட்பாளர் யார்? என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்தநிலையில் பெரம்பலூரில் நேற்று பாரிவேந்தர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாக தொகுதியில் இலவச குளிர்சாதன வாகனம் இயக்கப்படும் அல்லது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு அவர்களது இடத்துக்கே சென்று விளைபொருட்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய 300 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவச கல்வியும், நலிவுற்ற வேலையில்லா இளைஞர்கள் 500 பேருக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில் சேவை கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுப்பு கலெக்டர் பேட்டி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 137 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.
2. வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாயவிலைக்கடை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலைக்கடை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
3. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் ஏற்படவில்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
4. அனைத்து ரே‌‌ஷன்கடைகளிலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன அமைச்சர் பேட்டி
அனைத்து ரே‌‌ஷன்கடைகளிலும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
5. ஆஸ்திரேலியாவில் இருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும்; பொன்.மாணிக்கவேல் பேட்டி
ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து 7 சிலைகள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பொன்.மாணிக்கவேல் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.