மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் பணியில் 2 ஆயிரம் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இயக்குனர் தகவல் + "||" + 2 thousand in election work in Tamil Nadu Director of Railway Security Forces Director

தமிழகத்தில் தேர்தல் பணியில் 2 ஆயிரம் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இயக்குனர் தகவல்

தமிழகத்தில் தேர்தல் பணியில் 2 ஆயிரம் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இயக்குனர் தகவல்
தமிழகத்தில் 2 ஆயிரம் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என திருச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் அருண்குமார் கூறினார்.
திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 75 கம்பெனி ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் 14 கம்பெனி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தலா ஒரு கம்பெனியில் 145 பேர் வீதம் 14 கம்பெனியை சேர்ந்த 2 ஆயிரத்து 30 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து ரெயில்களிலும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். வாக்காளர் களுக்கு வினியோகிப் பதற்காக பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படு கிறதா?. அல்லது மதுபாட்டில்கள் கடத்தப்படு கிறதா? என தீவிரமாக கண்காணிக்கப்படும். பணம், மதுபாட்டில்கள் கடத்தி சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்போம். ரெயில்வே பாதுகாப்பு படையில் புதிதாக 8,600 வீரர்களும், 1,200 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரெயில் நிலையங்களில் பிரதான நுழைவு வாயில் தவிர, பல இடங்களில் திறந்தவெளி நுழைவு வாயில்கள் உள்ளன. ரெயில் நிலையங் களின் வரைபடத்தை எடுத்து பார்த்தால் அந்த நுழைவுவாயில்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கும். இதனால் தேவையற்ற நுழைவு வாயில்கள் இருப்பதால் பாதுகாப்பு பணியில் சில சிரமங்கள் ஏற்படலாம். ஆகையால் தேவையற்ற நுழைவுவாயில்களை மூடுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு சில நபர்கள் சட்டவிரோதமான மென்பொருளை பயன்படுத்தி இடஒதுக்கீடு மூலம் வழங்கப்படும் ரெயில்வே டிக்கெட்டுகளை தனியார் ஏஜென்சி பெயரில் முன்பதிவு செய்து, பெரிய அளவில் விற்பனை செய் கிறார்கள். இது குறித்து அறிந்து சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.2 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இனி தொடர்ச்சியாக இதுபோன்ற அதிரடி சோதனைகள் நடத்தப்படும். தற்போது 450 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனை விரிவுபடுத்தும் வகையில் நாடு முழுவதும் 6 ஆயிரம் ரெயில் நிலையங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் ஒவ்வொரு ரெயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரெயில்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும்போது, தன்னுடன் கண்காணிப்பு கேமராவை கொண்டு செல்லும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு கேமராவுடன் செல்லும்போது, அங்கு ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால், அதனை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணித்து தேவையான நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. வட்டார அளவிலான வேளாண் எந்திரம்-கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
வட்டார அளவில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
2. வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை அமைச்சர் தகவல்
வேதாமிர்த ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
3. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி 17-ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் விக்கிரமராஜா தகவல்
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விக்கிரமராஜா கூறினார்.
4. வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும் பார்வையாளர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் சேர்க்க வேண்டும் என வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான் கூறினார்.
5. பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை