மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Before the Collector office Overhead Reservoir Tank Operators Demonstration

கலெக்டர் அலுவலகம் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, 

தமிழக அரசு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வேலு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு 7-வது ஊதியக்குழு அறிவித்த 30 சதவீதத்தை ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், சேத்துப்பட்டு, போளூர், செங்கம் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு 4 ஆயிரத்து 740 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 320 ரூபாய் ஊதியம் குறைத்து வழங்குவதை கைவிடக் கோரியும் கோஷங்களை எழுப்பினர். இதில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் பலர் கலந்துகொண்டனர். 

ஆசிரியரின் தேர்வுகள்...