மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து + "||" + Municipal corporation fire in Tanjore

தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
தஞ்சையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு உருவான புகையால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. கிடங்கில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

அடிக்கடி குப்பைகள் தீப்பிடித்து எரிகிறது. யாராவது தீ வைத்து கொளுத்துகிறார்களா? அல்லது எப்படி தீ விபத்து ஏற்படுகிறது? என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.


இந்தநிலையில் நேற்று மதியம் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனால் ஜெபமாலைபுரம், சீனிவாசபுரம், மேலவெளி ஆகிய பகுதிகளில் புகை மூட்டமாக காணப்பட்டதால் பொதுமக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக யாராவது திட்டமிட்டு குப்பைகளை கொளுத்தி விடுகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்பு வீரர்களும் இந்த தீயை அணைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் தீவிபத்து முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்
கும்பகோணத்தில் கிராம நிர்வாக அலுவலகங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின.
2. சூடான் நாட்டுக்கு வேலைக்கு சென்ற நாகை வாலிபரின் கதி என்ன? தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ‘வீடியோ’ காட்சியால் உறவினர்கள் குழப்பம்
சூடான் நாட்டில் நடந்த தீ விபத்தில் நாகை வாலிபர் ஒருவர் பலியானதாக தகவல் வந்த நிலையில் அவர் விபத்து நடந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறுவது போன்ற ‘வீடியோ’ காட்சி அவருடைய சகோதரருக்கு கிடைத்துள்ளது.
3. கரூர் அருகே துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து; ரூ.20 கோடி மின்மாற்றி எரிந்து நாசம்
கரூர் அருகே புகளூரில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான மின்மாற்றி தீயில் எரிந்து நாசமடைந்தது.
4. பிரான்சில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி 3 பேர் சாவு
பிரான்சில் மீட்பு பணிக்காக சென்ற ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
5. மோகனூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 7 பெண்கள் உள்பட 19 பேர் காயம்
மோகனூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பெண்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.