மாவட்ட செய்திகள்

குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை + "||" + The suicide of the worker who was poisoned by the wife refused to come for the family

குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
நாகூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகூர்,

நாகூரை அடுத்த வடக்கு பால்பண்ணைசேரியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி பூரணராதா (35). ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பூரணராதா, கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து பலமுறை பூரணராதாவின் பெற்றோர் வீட்டுக்கு ராஜ்குமார் சென்று மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பூரணராதா வரமறுத்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார்.


இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை(வி‌ஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாப்பாரப்பட்டி அருகே, புதுமாப்பிள்ளை,தற்கொலை
பாப்பாரப்பட்டி அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
2. வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் பரிதாப முடிவு
லால்குடி அருகே, வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
3. அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
திருச்சி அரசு மருத்துவமனையின் 6-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.
4. பரமத்தி வேலூர் அருகே ரிக் வண்டி உரிமையாளர் குடும்பத்துடன் தற்கொலை
நாமக்கல் அருகே ரிக் வண்டி உரிமையாளர் குடும்பத்துடன் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கன்னியாகுமரி அருகே மனைவி மாயமான விரக்தியில் கொத்தனார் தற்கொலை
கன்னியாகுமரி அருகே மனைவி மாயமான விரக்தியில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.