மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு + "||" + Basic Features Collector survey in polling stations

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
அடிப்படை வசதிகள் குறித்து வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,

குன்னூர் அருகே மேலூர் அரசு தொடக்கப்பள்ளி, தூதுர்மட்டம் அரசு நடுநிலைப்பள்ளி, சேலாஸ் லிட்டில் பிளவர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி, வண்டிசோலை நடுநிலைப்பள்ளி, ஓட்டுப்பட்டரை சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி, குன்னூர் நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக விடுபட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

முன்னதாக ஊட்டி அருகே உள்ள கேத்தி சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை கலெக்டர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்ட ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்‘ என்ற விழிப்புணர்வு குறும்பட பிரசார வாகனத்தை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதில் குன்னூர் தாசில்தார் தினேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உடுமலை அருகே வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
உடுமலை அருகே ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
2. புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் 10ம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
3. கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் சம்பவம், வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் சாவு
கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடிகளில் மயங்கி விழுந்து 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
4. வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டம் - தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
வாக்குச்சாவடிகளை கைப்பற்ற ஆளும் கூட்டணி திட்டமிட்டுள்ளது என தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார் அளித்துள்ளது.
5. கடலூர் தாலுகா அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்
கடலூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.