மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் + "||" + condemned the incident of Pollachi College students struggle

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரை மற்றும் நாகமலைபுதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 200–க்கும் மேற்பட்ட மாணவிகள், பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர் சங்கத்தினர் சார்பிலும், பல்வேறு அமைப்பினர் சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதேபோல் மதுரை கல்லூரியில் 200–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், அகில இந்திய மகளிர் கலாசார சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் செல்வி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வால்டேர், அகில இந்திய மகளிர் கலாசார சங்க மாநில தலைவர் கில்டாமேரி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இதில் கலந்து கொண்டவர்கள், பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.


தொடர்புடைய செய்திகள்

1. 4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடுகோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
4 வழிச்சாலைக்கு கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் அறிவித்த காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் ஒத்திவைக்கப்பட்டது.
2. உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு தண்டனை - உதவி போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை ஓட்டினால் அவர்களின் பெற்றோர்களுக்கு தான் தண்டனை வழங்கப்படும் என விருதுநகர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்தார்.
3. பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்
பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
4. கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில், இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டம்
கோவில் சொத்துகளை மீட்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு
கல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை