மாவட்ட செய்திகள்

காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி + "||" + In kacimedu Shooting Vijay fans beat the police over

காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

காசிமேட்டில் படப்பிடிப்பு விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி
காசிமேட்டில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவொற்றியூர்,

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை டைரக்டர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. காசிமேடு மீன்பிடி துறைமுக கடற்கரையில் ‘செட்’ அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பு நடந்தது. இதில் நடிகர் விஜய் கலந்துகொண்ட காட்சி படமாக்கப்பட்டது.

ரசிகர்கள் அனைவரும் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்த விசைப்படகுகள் மற்றும் பாறைகள் மீது ஏறி நின்று நள்ளிரவு வரை படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தனர். சிலர் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்றனர்.

நேரம் செல்ல செல்ல ரசிகர்களை கட்டப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் அனைவரும் கூச்சல் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தினர். அப்போது ரசிகர்கள் ஓடியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரசிகர்கள் சிலர் கூறுகையில், ‘நடிகர் விஜயை பார்க்க மாலை 4 மணியில் இருந்து காத்து கொண்டிருந்தோம். ஆனால் பார்க்கவிடாமல் அடித்து துரத்துகின்றனர். நாங்கள் யாருக்கும், எந்த சிரமமும் கொடுக்காமல் விஜயை பார்க்க காத்திருந்தோம். ஆனால் பாதுகாப்பு பிரச்சினை என்று கூறி எங்களை போலீசார் அடித்து விரட்டி விட்டனர்’ என்று தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லாததால் மீனவர்கள் அச்சம்
பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரிக்கரையில் கட்டப்பட்டுள்ள கடலோர போலீஸ் நிலையத்திற்கு போதிய அளவில் போலீசாரை நியமித்து, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு
கந்து வட்டி கேட்டு மிரட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டிடம் ஆட்டோ உரிமையாளர் மனைவி மனு கொடுத்தார்.
3. நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜராகவில்லை
நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை. படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் வருவதாக கடிதம் கொடுத்துள்ளார்.
4. கடந்த ஒரு வருடத்துக்குமேல் காலியாக உள்ள லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் கடந்த 1 வரு டத்திற்குமேல் காலியாக உள்ளதால் இப்பணியிடத்தை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. தஞ்சை பெரியகோவிலில் பறந்த ஹெலிகேமராவால் பரபரப்பு படம் பிடித்த நபர் யார்? போலீஸ் விசாரணை
தஞ்சை பெரியகோவிலில் ஹெலிகேமரா பறந்ததால் பரபரப்பு நிலவியது. இதன் மூலம் படம் பிடித்த நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.