மாவட்ட செய்திகள்

வானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி. + "||" + 100 inch TV

வானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி.

வானவில் :ரூ. 20 லட்சத்துக்கு 100 அங்குல டி.வி.
கிரிக்கெட்டில் சதமடித்தால் சந்தோஷம். அதைப்போல தேர்வில் சதம் எடுத்தால் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதைப் போல நூறு என்பது ஒரு நிறைவைத் தரும் எண்.
வு ( wu ) நிறுவனம் 100 அங்குல டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.20 லட்சமாகும். இந்தியாவிலேயே மிக அதிக விலை கொண்ட டி.வி.யாக இது உள்ளது. இதனுள்ளேயே சவுண்ட் பார் (ஜே.பி.எல். சிஸ்டம்) உள்ளது. அதேபோல டால்பி ஆடியோ வசதி கொண்ட டி.டி.எஸ். ஊபரும் உள்ளது. இது 3840 X 2160 பிக்ஸெல்லை கொண்டது.

இது 250 கோடி நிறங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. டைனமிக் கான்டிராஸ்ட், அல்ட்ரா ஸ்மூத் மோஷன் கண்ட்ரோல், நாய்ஸ் ரிடெக்‌ஷன் வசதி உட்பட பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

இது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்கு தளத்தில் செயல்படக் கூடியது. இதில் குவாட் கோர் சி.பி.யு. மற்றும் 2.5 ஜி.பி. ரேம் உள்ளது. இதன் நினைவக வசதி 16 ஜி.பி. வரையாகும். இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற பிரபல மீடியா ஆப் (செயலிகள்) இதில் உள்ளடாக (இன் பில்ட்) உள்ளன.

இது தவிர கூகுள் பிளே ஸ்டோரும் உள்ளது. மேலும் கூகுள் அசிஸ்டென்ட் குரல் வழி கட்டுப்பாட்டு வசதி ஆகியன உள்ளன. இதற்கென பிரத்யேகமாக தனி பொத்தானும் ரிமோட்டில் உள்ளது.

இதை வயர்லெஸ் மூலம் புளூடூத் வழியாக தொடர்பு கொள்ளலாம். குரோம்காஸ்ட், மீடியா ஸ்ட்ரீமிங் வசதி கொண்டது. அத்துடன் ஹெச்.டி.எம்.ஐ 2.0 போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட் ஆகியன உள்ளன. மிகப் பெரிய பங்களாக்களை பிரமாண்டமாக அலங்கரிக்க இந்த டி.வி. நிச்சயம் உதவும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை