மாவட்ட செய்திகள்

வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தா ஆய்வு + "||" + Collector Sandha study of polling centers

வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தா ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் சாந்தா ஆய்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏப்ரல் 18-ந் தேதி வாக்களிக்க வருகை தரும் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கிடைத்திட முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரெங்கநாதபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் தம்பிரான் பட்டி அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படவுள்ள வாக்குச் சாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சாய்தளத்துடன் கூடிய பாதை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், மேலும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வருகை தரும் அரசு ஊழியர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும் தொடர்புடைய அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி கூறியுள்ளார்.
2. அரியலூரில் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரி ஆய்வு
உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் தலைமை பொறியாளர் முருகேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3. அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் கலெக்டர் பரிசு வழங்கினார்
அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
4. புகளூர் காவிரியாற்று பகுதியில் கதவணை அமைக்கப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு
கரூர் மாவட்டம் புகளூர் காவிரியாற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைப்பது குறித்து 110 விதியின் கீழ் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
5. அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.