மாவட்ட செய்திகள்

சேலையூர் அருகே பெண்ணை கொன்று கழிவுநீர் தொட்டியில் உடல் வீச்சு தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Near Salaiyur Kill the girl Body through to the waste water tank

சேலையூர் அருகே பெண்ணை கொன்று கழிவுநீர் தொட்டியில் உடல் வீச்சு தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலையூர் அருகே பெண்ணை கொன்று கழிவுநீர் தொட்டியில் உடல் வீச்சு தலைமறைவான வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
சேலையூர் அருகே, பெண்ணை கொன்று உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள கோவிலாஞ்சேரி, அகரம் தென் பிரதான சாலையை சேர்ந்தவர் குணசேகரன்(வயது 54). இவர், சொந்தமாக விவசாய நிலம் மற்றும் மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்தைச் சேர்ந்த தேவி (35) என்ற பெண், தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டதாக கூறி, குணசேகரனிடம் வேலை கேட்டார்.

குணசேகரனும் தனது விவசாய நிலம் மற்றும் மாடுகளை பராமரிக்க தேவியை அங்கேயே தங்கி வேலை செய்ய ஒப்புக்கொண்டார். கடந்த 3 மாதங்களாக தேவி அங்கு வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 3–ந்தேதி தேவியின் கணவர் என்று கூறிக்கொண்டு வாலிபர் ஒருவர் வந்து தேவியை ஊருக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவருடன் செல்ல தேவி மறுத்து விட்டார்.

எனவே இருவரும் அங்கேயே தங்கி வேலை செய்வதாக குணசேகரனிடம் கூறினர். அதற்கு குணசேகரனும் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு கணவன்–மனைவி இருவரும் அங்கேயே தங்கி இருந்தனர்.

ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 16–ந்தேதியில் இருந்து தேவி மற்றும் அவரது கணவர் இருவரும் மாயமானார்கள். இருவரும் சொல்லாமல் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் என நினைத்த குணசேகரன், அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை குணசேகரனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த குணசேகரன், கழிவுநீர் தொட்டி மூடியை திறந்து பார்த்தார். அதில், மாயமானதாக கருதப்பட்ட தேவி, பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த சேலையூர் போலீசார், கழிவுநீர் தொட்டியில் கிடந்த தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேவியுடன் கணவர் என்று கூறி தங்கி இருந்த வாலிபர்தான், அவரை கொன்று உடலை கழிவுநீர் தொட்டியில் வீசிவிட்டு தப்பிச்சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். உண்மையிலேயே அந்த வாலிபர் தேவியின் கணவர் தானா? அல்லது காதலனா? என்பதும் தெரியவில்லை.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பச்சிளம் குழந்தையின் உடலை நாய் கவ்வி வந்ததால் பரபரப்பு கடலில் வீசியவர் யார்? போலீஸ் விசாரணை
ஈத்தாமொழி அருகே பச்சிளம் குழந்தையின் உடலை நாய் வாயில் கவ்வி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த குழந்தையை கடலில் வீசியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விருத்தாசலத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.13 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. கீரிப்பாறை எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி சாவு போலீஸ் விசாரணை
கீரிப்பாறையில் எஸ்டேட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.
4. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி ஆசிரியை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23¼ லட்சம் மோசடி செய்த ஆசிரியை மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம்
போலீசுக்கு எதிராக சீக்கிய பெண் மொட்டையடித்து போராட்டம் நடத்தினார்.