மாவட்ட செய்திகள்

கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Acting as an Excellent Officer The police are searching for the mystery

கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு

கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே புங்கம்பாடி பிரிவு தேசிய நெடுஞ்சாலையோரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் தினமும் மது விற்பனையாகும் பணத்தை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவதற்காக ஊழியர் தங்கி இருப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் கடையில் மது விற்பனையான பணத்தை காலையில் வங்கி யில் செலுத்துவதற்காக கடை யின் விற்பனையாளர் கரூர் மாவட்டம், குளித்தலை வைப் புதூரை சேர்ந்த பாலகிருஷ் ணன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பாலகிருஷ் ணன் கடையின் கதவை ஒருபுறம் திறந்து வைத்து மதுபானம் விற்ற பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப்-டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் பாலகிருஷ்ணனிடம் தன்னை கலால் அதிகாரி என்று கூறி விசாரணை நடத்தினார்.

அப்போது பாலகிருஷ்ணன் அவரிடம், வங்கியில் செலுத்துவதற்காக பணத்தை எண்ணி கொண்டிருப்பதாக கூறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர் பாலகிருஷ்ணனிடம் இருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து பாலகிருஷ்ணன் அரவக்குறிச்சி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக் குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாள ரிடம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.