மாவட்ட செய்திகள்

பீட் மாவட்டத்தில் தாய், 2 குழந்தைகள் அணையில் மூழ்கி பலி + "||" + Mother, 2 children drown in dam in the Beat district

பீட் மாவட்டத்தில் தாய், 2 குழந்தைகள் அணையில் மூழ்கி பலி

பீட் மாவட்டத்தில் தாய், 2 குழந்தைகள் அணையில் மூழ்கி பலி
பீட் மாவட்டம் மாஜல்காவ் பகுதியை சேர்ந்த பெண் நசீம். இவர் தனது மகள் சேக் தாப்பு(வயது14) மற்றும் மகன் சொகேல்(11) ஆகியோருடன் மாஜல்காவ் அணைப்பகுதிக்கு துணி துவைக்க சென்றார்.
பீட்,

அணையின் அருகே சேக் தாப்புவும், அவளது தம்பியும் விளையாடிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திடீரென சிறுவன் சொகேல் கால் இடறி அணையில் ஆழமாக பகுதியில் விழுந்தான்.

தண்ணீரில் விழுந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த தம்பியை காப்பாற்ற சேக் தாப்புவும் நீரில் குதித்தாள். ஆனால் சிறுமியின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இருவரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் தவித்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியான தாய் நசீம் குழந்தைகளை காப்பாற்ற எண்ணி அணைநீரில் குதித்தார். ஆனால் 3 பேரும் கரைக்கு திருப்பமுடியாமல் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.