மாவட்ட செய்திகள்

வடகட்டளை வெள்ளையாற்றில் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை + "||" + Public demand for rehabilitation of damaged damaged areas in the North floods

வடகட்டளை வெள்ளையாற்றில் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வடகட்டளை வெள்ளையாற்றில் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
வடகட்டளை வெள்ளையாற்றில் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகட்டளை என்ற இடத்தில் வெள்ளையாற்றின் கரையோரத்தில் அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக படித்துறை கட்டப்பட்டது. இந்த படித்துறை வடகட்டளை, கானூர், வேளுக்குடி, பழையனூர், மங்களாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த படித்துறை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. அதாவது இந்த படித்துறையில் உள்ள படிக்கட்டுகள் முற்றிலும் சேதமடைந்து விட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் சமயத்தில் இந்த படித்துறையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி கீழே விழுந்து விடுகின்றனர்.

படித்துறை முற்றிலும் சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த படித்துறையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மன்னார்குடி சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மன்னார்குடியில் உள்ள சட்ருட்டி வாய்க்கால் தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
2. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோட்டூர் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. மின் கட்டணம் திடீர் உயர்வு; பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4. சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மன்னார்குடி பாமணி ஆறு கீழபாலம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
5. விருதுநகரில் இருந்து 250 சமையல் கியாஸ் இணைப்புகள் கள்ளிக்குடிக்கு மாற்றம் பொதுமக்கள் பாதிப்பு
விருதுநகர் வடக்கு பகுதியில் இருந்து 250 சமையல் கியாஸ் இணைப்புகள் கள்ளிக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.