மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி + "||" + Farmers are trying to stay fast by urging to open water in the channel

வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி

வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயற்சி
வாய்க்காலில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
குளித்தலை,

தென்கரை, கட்டளை மேட்டு வாய்க்கால்களுக்கு முறைவைத்து நீர்ப்பாசனம் தருவதாக கூறி, பின்னர் அதை நடைமுறை படுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 அடி உள்ளதால் பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மழை இல்லாத காரணத்தால் தென்னை போன்ற விவசாய பயிர்கள் கருக தொடங்கிவிட்டது. எனவே தமிழக அரசு மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும். தமிழக முதல்-அமைச்சர் தனது தொகுதிக்கு மேட்டூர் அணையின் தண்ணீரை வைத்து கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 10 ஆயிரம் ஏக்கருக்கு முறையற்ற பாசனம் நடத்த திட்டம் தீட்டியுள்ளார். முறையற்ற முறையில் பாசனம் நடத்தும் முதல்-அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் முன்னேற்ற இயக்க நிறுவனர் மருதூர் சண்முகம் தலைமையில் குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தனர்.

அதன்பேரில் மருதூர் சண்முகம் தலைமையில் நேற்று விவசாயிகள் பலர் உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். இதையடுத்து அப்போது அங்கு வந்த ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மாயனூர் தடுப்பணைக்கு போதிய அளவு தண்ணீர் மட்டம் உயர்ந்த பின்னர் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமென அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு கூறப்பட்டது. பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்த விவசாயிகள், இன்னும் 3 நாட்களுக்குள் வாய்க்காலில் தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். அதன்பின்னரும் தண்ணீர் திறக்கபடவில்லையெனில் விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் எனக்கூறிவிட்டு கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுடன் அனுமதி - கலெக்டர் அறிவிப்பு
மகா தீபத்தின்போது 2,500 பக்தர்கள் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2. 6 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
6 மாத இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்தார்.
3. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் கலெக்டர் சி.கதிரவன் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் அறிவித்தார்.
4. 17 பேர் பலி; ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு: முதல் அமைச்சர் நாளை கோவை பயணம்
கோவையில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
5. 3-வது நாளாக உண்ணாவிரதம்: கருணைக்கொலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில், நளினி மனு சிறையில் சந்தித்து பேசிய வக்கீல் தகவல்
தன்னையும், கணவரையும் கருணைக்கொலை செய்யுமாறு நளினி சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்துள்ளார். மேலும், விடுதலை செய்யக்கோரி ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.