மாவட்ட செய்திகள்

திட்டச்சேரி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம் + "||" + The scourges of political parties in the scam area

திட்டச்சேரி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்

திட்டச்சேரி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றம்
திட்டச்சேரி பகுதியில் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
திட்டச்சேரி,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சாலை ஓரங்களில் உள்ள அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் மற்றும் கொடி மேடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திட்டச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை திட்டச்சேரி பேரூராட்சி உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வாணியன் தெரு, தைக்கால் தெரு, திட்டச்சேரி பஸ் நிலையம், வெள்ளத்திடல், ஆற்றங்கரை தெரு, கொந்தகை, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிச்கம்பங்கள் மற்றும் கொடி மேடைகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. உக்கடத்தில், வாய்க்கால் ஆக்கிரமிப்பு - 268 வீடுகள் இடித்து அகற்றம்
கோவை உக்கடத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 268 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
2. திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
3. வலங்கைமானில், ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை
வலங்கைமானில், ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
4. கீழக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கீழக்கரையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
5. 215 அடி உயர கட்அவுட் அகற்றம்: டுவிட்டரில், சூர்யா உருக்கம்
215 அடி உயர கட்அவுட் அகற்றப்பட்டது தொடர்பாக, நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை