மாவட்ட செய்திகள்

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை + "||" + Rs.5.5 lakhs seized from the documents without proper documents Election Fly Soldiers Activity

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5½ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.5½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் பி.கே.ஆர்.நகரைச் சேர்ந்தவர் நவ நீதன் (வயது 23). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நிதி நிறுவனத்தின் பணம் ரூ.4 லட்சத்தை எடுத்துக் கொண்டு தனியார் வங்கியில் செலுத்துவதற்காக மோட்டார்சைக்கிளில் சென்றார். பழைய பஸ் நிலையம் அருகே வந்தபோது, தேர்தல் அதிகாரி பெருமாள்சாமி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நவநீதனை மறித்து அவர் வைத்திருந்த பணம் குறித்து விசாரித்தனர். அப்போது அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சிறப்பு துணை வட்டாட்சியர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த ராமர் என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.94 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டு சென்றதாக ராமர் கூறினார். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியில் உள்ள கூட்டுறவு வங்கி முன்பு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.53,500 இருந்தது. இது குறித்து காரில் வந்த திருப்பதிராஜன் (48) என்பவரிடம் விசாரித்தபோது அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அந்தப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருப்பதிராஜன் விவசாய தொழில் செய்து வருகிறார்.