மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்தில்வறட்சியை சமாளிக்க சொட்டுநீர் பாசனத்துக்கு மாறும் விவசாயிகள் + "||" + Vellore district Farmers who convert to drip irrigation to deal with drought

வேலூர் மாவட்டத்தில்வறட்சியை சமாளிக்க சொட்டுநீர் பாசனத்துக்கு மாறும் விவசாயிகள்

வேலூர் மாவட்டத்தில்வறட்சியை சமாளிக்க சொட்டுநீர் பாசனத்துக்கு மாறும் விவசாயிகள்
வேலூர் மாவட்டத்தில் வறட்சியை சமாளிக்க விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறி வருகிறார்கள். இதற்காக ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை, 

வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைக்கு அடுத்து, விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பாலாற்றை நம்பி பெரும்பாலான விவசாயிகள், விவசாயம் செய்து வந்தனர். பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டியதன் காரணமாக பாலாறு வறண்டு விட்டது. அதோடு பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளை காரணமாக நிலத்தடிநீர் மட்டமும் குறைந்து விட்டது. இதனால் பாலாற்றை நம்பி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலாற்றில் மழை காலத்தில் காட்டாற்று வெள்ளம் மட்டுமே செல்கிறது. அதுவும் தேக்கி வைக்கப்படாமல் வீணாகி விடுகிறது. இதனால் தண்ணீரின்றி விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. வேலூர் மாவட்டம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறைந்த அளவு தண்ணீரை கொண்டு விவசாயம் செய்யவதற்கு வசதியாக விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடனும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடனும் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்பட்டு வருகிறது. தற்போது வறட்சியை சமாளிக்க விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்துக்கு மாறி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்திற்காக 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 87 ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தர வேண்டி 8 ஆயிரம் விவசாயிகள் வேளாண்மை துறையில் பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி அமைத்து கொடுக்க ரூ.31 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் முதல் கட்டமாக 2,700 விவசாயிகளுக்கு 2321 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.10 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு படிப்படியாக மானியம் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் நாற்று நட்ட பள்ளி மாணவர்கள்
விவசாயிகள் தினத்தையொட்டி வயலில் பள்ளி மாணவர்கள் நாற்று நட்டனர்.
2. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அதிகாரியிடம் விவசாயிகள் மனு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 சதவீத இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என அதிகாரியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
3. விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்கிறது உ.பி. அரசு; பிரியங்கா குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் விவசாயிகளை விளம்பரங்களில் மட்டுமே நினைவுகூர்ந்திடும் அரசு நடந்து வருகிறது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
4. 450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் கருகும் அபாயம் கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கீழ்வேளூர் அருகே மோகனூரில் 450 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளது. எனவே பயிர்களை காப்பாற்ற கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை நெல்மூட்டைகளுடன் விவசாயிகள் முற்றுகை
நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தை நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...