மாவட்ட செய்திகள்

வீரபாண்டியில், வாலிபர் கொலையில் 5 பேர் கைது + "||" + In Veerapandi, 5 people have been arrested for murder

வீரபாண்டியில், வாலிபர் கொலையில் 5 பேர் கைது

வீரபாண்டியில், வாலிபர் கொலையில் 5 பேர் கைது
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வீரபாண்டி,

திருவண்ணாமலை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (வயது 28). பனியன் நிறுவன தொழிலாளியான இவர் பல்லடம் அவரப்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்வத்தன்று கார்த்திக்கு தனது நண்பர் தீனதயாளன் (28) என்பவருடன் வீரபாண்டி பகுதிக்கு கிரிக்கெட் விளையாட சென்றார். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாட வந்த நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த எம்.ராஜா என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினை குறித்து எம்.ராஜாவிடம் பேசுவதற்கு குடிபோதையில் கார்த்திக் தனது நண்பர்களான தீனதயாளன், கண்ணன் ஆகியோருடன் கத்தி மற்றும் கட்டையுடன் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு எம்.ராஜா மற்றும் அவருடைய நண்பர்களான கருப்பு என்கிற சரவணன் (29), வெங்கடேசன் (32), ஆர்.ராஜா (27), முத்துக்குமார் (28) ஆகியோர் அங்கு இருந்துள்ளனர்.

இதையடுத்து எம்.ராஜா மற்றும் அவருடைய நண்பர்களுடன், கார்த்திக் மற்றும் கார்த்திக் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் கார்த்திக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீரபாண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்மபந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு கருப்பு என்கிற சரவணன், ஆர்.ராஜா, வெங்கடேசன், எம்.ராஜா, முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் கொலை வழக்கில் 4 பேர் கைது
கோர்ட்டிற்கு சென்று விட்டு வந்த வாலிபரை ஓட, ஓட விரட்டி கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை: கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல்; பஸ், கடைகள் தாக்கப்பட்டதால் பரபரப்பு
வாலிபர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது கடைகள் மற்றும் பஸ்மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. வாலிபர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
வாலிபர் கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
4. விருத்தாசலம் வாலிபர் இறந்த வழக்கில் திருப்பம், “ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொன்றது அம்பலம்” - வாலிபர் கைது
விக்கிரவாண்டி அருகே விருத்தாசலத்தை சேர்ந்த வாலிபர் இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அவரை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி கொன்றது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக மதுரையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. குறிஞ்சிப்பாடி பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது
குறிஞ்சிப்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.