மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி + "||" + Near Tirupathur Car-motorcycle clash 2 people Kills

திருப்பத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி

திருப்பத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
திருப்பத்தூர் அருகே மானகிரி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருப்பத்தூர்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முக்கொடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் அய்யப்பன் (வயது 29). இவரது நண்பர் ஆனந்தன் (47). கார் டிரைவர். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக தேவகோட்டையிலிருந்து அறந்தாங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தன் ஓட்டி வந்தார்.

இவர்கள் மானகிரி அருகே வந்த போது, அதேபகுதியை சேர்ந்த அபுதாகிர் என்பவர் தனது காரை ஓட்டி வந்தார். அப்போது, கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யப்பன், ஆனந்தன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய கார் நிலைதடுமாறி அருகில் ரோட்டின் ஓரத்தில் சேதமாகி நின்றது. தகவலறிந்து வந்த நாச்சியாபுரம் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரில் வந்த அபுதாகிர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்து விழுந்து ஒப்பந்த ஊழியர் பலி
தாராபுரத்தில் நான்கு வழிச்சாலை திட்டப்பணியின் போது மின்கம்பம் முறிந்துவிழுந்து ஒப்பந்த ஊழியர் பலியானார். மற்றொரு ஊழியர் படுகாயம் அடைந்தார்.
2. தத்தெடுத்து வளர்த்த சிறுவன் தவறி விழுந்து சாவு; நண்பர்களுடன் விளையாடிய போது சோகம்
தத்தெடுத்து வளர்க்கப்பட்ட சிறுவன் நண்பர்களுடன் விளையாடிய போது, தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
3. வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு; நண்பர்களுடன் குளித்த போது சோகம்
வேப்பூர் அருகே நண்பர்களுடன் குளித்த போது கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
4. திருப்போரூர் அருகே லாரி மோதி சிறுவன் பலி; தந்தை கண் எதிரே பரிதாபம்
திருப்போரூர் அருகே தந்தை கண்எதிரே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி 13 வயது சிறுவன் பலியானான்.
5. தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது; பெண் பலி
சென்னை நெற்குன்றத்தில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி பஸ் நிறுத்தத்துக்குள் புகுந்தது. இதில் பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.