மாவட்ட செய்திகள்

குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை + "||" + Special prayers at St. Patham's Mother's Temple on Sunday

குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குருத்தோலை ஞாயிறையொட்டி புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
திருவாரூர் புனித பாத்்திமா அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர்,

ஈஸ்டர் பண்டிகை என்னும் புனித வெள்ளி பண்டிகை வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவின் முந்தைய ஞாயிற்று கிழமையை குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதையொட்டி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை பங்கு தந்தை உலகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கு மன்ற துணைத்தலைவர் ஜார்ஜ் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குருத்தோலை பவனி

முன்னதாக குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திருவாரூர் கீழவீதியில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தென்னங்குருத்தோலைகளை கைகளில் ஏந்தி முக்கிய வீதிகளில் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தனர். இதேபோல அனைத்து திருச்சபைகளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.