மாவட்ட செய்திகள்

த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் கோவை.தங்கம் வேண்டுகோள் + "||" + Tamaka Request candidate NR Nadarajan to win a high vote.

த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் கோவை.தங்கம் வேண்டுகோள்

த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் கோவை.தங்கம் வேண்டுகோள்
தஞ்சை நாடாளுமன்ற த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்று மாநில துணைத்தலைவர் கோவை.தங்கம் கூறினார்.
தஞ்சாவூர்,

ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் த.மா.கா. சார்பில் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்மூப்பனார், த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல்சேகர், மாவட்ட தலைவர் ரெங்கராஜன், செயற்குழு உறுப்பினர் பி.எல்ஏ.சிதம்பரம், தஞ்சை மாநகர செயலாளர் ராஜவேல், ஒரத்தநாடு தேர்தல் பொறுப்பாளர் குடவாசல் தினகரன், சக்திவேல், திருச்சி மாவட்ட தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் த.மா.கா. மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை.தங்கம் பேசியதாவது:-

இந்திய நாட்டை பலமான நாடாக உருவாக்க, தேசத்தை பாதுகாக்க, இந்தியாவின் ஒருமைப்பாட்டை காப்பாற்ற மீண்டும் மோடி பிரதமராக தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் என்.ஆர்.நடராஜனை ஆட்டோ சின்னத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். என்.ஆர்.நடராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுடைய வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மத்திய மந்திரியாக ஜி.கே.வாசன் 10 ஆண்டுகள் இருந்த போது ஊழல் இல்லாதவராக, ஒரு குறையும் சொல்ல முடியாத, நேர்மையான, எளிமையான மந்திரி என்று பெயர் பெற்றவர். எனவே அவருடைய வேட்பாளரும், ஊழல் செய்யாதவராக, மக்களுக்கு உண்மையாக, சேவை புரிபவராக நிச்சயம் செயல்படுவார் என்பது உறுதி.

நாட்டின் கடந்த 20 நாட்களாக தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியிலும் மக்களின் எண்ணங்களை கேட்டு அறிந்த வகையில் என்.ஆர்.நடராஜன் நிச்சயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இது உறுதி. என்.ஆர்.நடராஜன்வெற்றிக்கு கடுமையாக உழைத்து வருகின்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்மூப்பனார், மாவட்ட தலைவர் என்.ஆர்.ரெங்கராஜன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர், தே.மு.தி.க.வினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினர், புதிய தமிழகம், தமிழ்நாடு முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களான சரத்குமார், சண்முகம், பூவைமூர்த்தி மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.