மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் ஆலோசனை + "||" + The Chief Electoral Officer of the Tamil Nadu Chief Minister is advised by the TV Show

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி காட்சி மூலம் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுக்கோட்டை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தமிழக டி.ஜி.பி. (தேர்தல்) அசுதோஷ் சுக்லா ஆகியோர் காணொலி காட்சி மூலம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது;-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் சேவை மையங்கள், மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் அரசியல் கட்சியினரின் பிரசாரங்களை கண்காணித்து, செலவு விவரங்களை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கணக்கில் சேர்த்தல் மற்றும் மாவட்டத்தில் பண பரிவர்த்தனைகளை முழுமையாக கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட இணையதளத்தின் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்று, பல்வேறு கட்டங்களாக சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையின் போது வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் அனைத்துத்தரப்பு வாக்காளர்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. குறிப்பாக மாற்றுத்திறனாளிக்களுக்கான சாய்தள வசதி, சக்கர நாற்காலிகள், அவர்களுக்கான உதவியாளர்கள், குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது. வாக்குச்சாவடிக்குள் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளதையும், தடைபடாத மின்சார வசதியை உறுதி செய்யப்பட்டு உள்ளது குறித்தும் கேட்டறியப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது குறித்து மத்திய மந்திரி ஆலோசனை
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது குறித்து மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
2. வெளிநாட்டு பயணம்; சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி வெளிநாட்டு பயணத்திற்கு முன் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
3. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கன்னியாகுமரிக்கு நாளை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாளை (திங்கட்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
4. 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் மத்தியக்குழு அதிகாரி தகவல்
2020-ம் ஆண்டுக்குள் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என மத்தியக்குழு அதிகாரி உமாசுரேஷ் தெரிவித்தார்.
5. சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கை குறித்து கோவையில் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. திரிபாதி ஆலோசனை
சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து கோவையில் தமிழக டி.ஜி.பி. திரிபாதி, போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை