மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் + "||" + Ambedkar Birthday Celebration in various parts of the district

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை காந்தி சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு அக்கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். தொடர்ந்து அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விவசாய அணி மாநில துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலாயுதம்பாளையம்

இதேபோல் புகளூர் காகித ஆலை ஒப்பந்த தொழிலாளர் விடுதலை முன்னணி இயக்கம் சார்பில் டி.என்.பி.எல். காகித ஆலை முன்பு அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா அரசியல் கட்சிகள், அமைப்புகள் சர்பில் கொண்டாடப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சட்டமேதை அம்பேத்கரை புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். இதே போல் புரட்சி பாரதம் சார்பில் மாவட்ட செயலாளர் செல்லமுத்து மாலை அணிவித்தார்.