மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுவினாத்தாள் வெளியான வழக்கில் 5 பேர் கைது2 பேருக்கு வலைவீச்சு + "||" + Class 10 General 5 arrested in the case 2 people breastfeeding

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுவினாத்தாள் வெளியான வழக்கில் 5 பேர் கைது2 பேருக்கு வலைவீச்சு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுவினாத்தாள் வெளியான வழக்கில் 5 பேர் கைது2 பேருக்கு வலைவீச்சு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த மார்ச் 11, 13, 15, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கான இயற்கணிதம், வடிவியல், அறிவியல் முதல் தாள், அறிவியல் 2-ம் தாள், வரலாறு ஆகிய தேர்வுகள் நடந்தன.

இந்த தேர்வு வினாத்தாள்கள் பிவண்டி பகுதியில் உள்ள மாணவர்கள் இடையே வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தானே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், தேர்வு வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்த தனியார் பயிற்சி நிறுவன உரிமையாளர்கள் சேக் ரகுமான் (வயது39), அம்பார் மாலிக் (27), பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் முகமது நபித் அன்சாரி (27), நிசாத் பட்டேல் (32), முபின் முகமது (38) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஆசிரியர் சஜித் கார்பே, தனியார் பயிற்சி பள்ளி உரிமையாளர் அசார் அலி போரத் ஆகியோரை தேடி வருகின்றனர்.