மாவட்ட செய்திகள்

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை + "||" + Near Ramanatham, Rs.3¼ lakh jewelery robbery at the farmer house

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை

ராமநத்தம் அருகே, விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் நகை கொள்ளை
ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள தொழுதூர் தச்சூர் சாலையை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 49). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினார். நேற்று காலை எழுந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறந்து அதில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 16 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

மாணிக்கம் குடும்பத்தினர் கதவை திறந்து வைத்துவிட்டு, வெளியே தூங்குவதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3¼ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருக்கோவிலூரில், வேளாண்மை அதிகாரி வீட்டில் பணம்-நகை கொள்ளை - போலீசார் விசாரணை
திருக்கோவிலூரில் வேளாண்மை அதிகாரி வீட்டில் பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. காரிமங்கலம் அருகே துணிகரம், அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம், 48 பவுன் நகை கொள்ளை
காரிமங்கலம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் ரூ.15 லட்சம் மற்றும் 48 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. மதுரவாயல் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம்-நகை கொள்ளை
மதுரவாயல் அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் மற்றும் 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
4. பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார் முதியவர் படுகொலை; நகை கொள்ளை மொபட்டும் திருட்டு
பூட்டிய வீட்டுக்குள் முதியவர் பிணமாக கிடந்தார். மர்மநபர்கள் அவரை கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, 3 பவுன் நகையை கொள்ளையடித்ததுடன், மொபட்டையும் திருடிச்சென்று உள்ளனர்.
5. திருவெண்ணெய்நல்லூர் அருகே, விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-