மாவட்ட செய்திகள்

அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம் + "||" + Two young men who were riding a motorbike near Arumana killed a dog in the dungeon

அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்

அருமனை அருகே விபத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பலி நாய் குறுக்கே பாய்ந்ததால் விபரீதம்
அருமனை அருகே நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
அருமனை,

அருமனை அருகே கடையாலுமூடு, காட்டாவிளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 34). ஆறுகாணியை சேர்ந்தவர் அபிமன்யூ என்கிற மணிகுட்டன் (22). கற்றுவா பகுதியை சேர்ந்தவர் தானேஷ் (24). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளர்கள்.

கடந்த சிலநாட்களாக குழித்துறை அருகே மருதங்கோடு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்தனர்.

நேற்று காலையில் வேலைக்கு செல்வதற்காக 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடையாலுமூட்டில் இருந்து மருதங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அருமனை அருகே குஞ்சாலுவிளையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 3 பேரும் சாலையில்  தூக்கி வீசப்பட்டனர். இதில் ஜெகதீஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அபிமன்யூ, தானேஷ் சாலையில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிமன்யூ பரிதாபமாக இறந்தார்.

 தானேஷ் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மோட்டார் சைக்கிள் மோதியதில் நாயும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து செத்தது.

விபத்தில் 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்
புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இறந்த 4 பெண்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
2. வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை
புதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3. குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி
குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
4. துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
5. அரசு பஸ் மோதி வாலிபர் பலி
அரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.