மாவட்ட செய்திகள்

‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் + "||" + 'Shelby' to take The boy got into the train and hit the electricity

‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்

‘செல்பி’ எடுப்பதற்காகரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்
‘செல்பி’ எடுப்பதற்காக ரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தான்.
மும்பை,

‘செல்பி’ எடுப்பதற்காக ரெயில் மீது ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தான்.

கிரிக்கெட் விளையாட்டு

மும்பை மலாடு பகுதியை சேர்ந்தவர் மனிஷ். இவர் மால்வானி பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குசால் (வயது 13). இவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று குசால் 4 சிறுவர்களுடன் ராம்மந்திர் ரெயில்வே பகுதியில் கிரிக்கெட் விளையாட சென்றான்.

இதில், சிறுவன் விளையாடி கொண்டு இருந்த போது அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயிலின் மேற்கூரை மீது ஏறி உள்ளான். அப்போது சிறுவனின் கை தெரியாமல் உயரழுத்த மின் கம்பி மீது பட்டுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து அவன் தூக்கி வீசப்பட்டான்.

செல்பி எடுப்பதற்காக...

தகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 75 சதவீத தீக்காயத்துடன் சிறுவன் தற்போது கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், ‘‘குசால் செல்பி எடுப்பதற்காக ரெயில் மீது ஏறி உள்ளான். அப்போது தெரியாமல் அவனது கை உயரழுத்த மின் கம்பியில் பட்டதால், மின்சாரம் தாக்கி காயமடைந்து உள்ளான்’’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.