மாவட்ட செய்திகள்

கோடை வெயிலுக்கு இதமாக நாகர்கோவிலில் இடி– மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை + "||" + Rain in the Nagercoil with a thunderstorm in the summer heat

கோடை வெயிலுக்கு இதமாக நாகர்கோவிலில் இடி– மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை

கோடை வெயிலுக்கு இதமாக நாகர்கோவிலில் இடி– மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை
கோடை வெயிலுக்கு இதமாக நாகர்கோவிலில் நேற்று இடி– மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் அனலாக கொதிக்கிறது. வீடுகளில் இருப்பவர்கள் மின்விசிறி உதவியின்றி இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளுத்து வாங்கும் வெயிலின் வெப்பத்தால் மக்கள் இரவு, பகல் நேரங்களில் வியர்வையால் குளித்து வந்தனர். இதனால் பெரும்பாலானோர் பலமுறை குளிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த வெயிலின் உஷ்ணத்தோடு, தேர்தல் பிரசாரமும் அனல் பறந்தது. வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தனர். நேற்று முன்தினம் வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் குமரி மாவட்டம் முழுவதும் வெயில் குறைந்து வானம் கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டு இருந்தது. குழித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது.

இந்தநிலையில் நாகர்கோவிலில் நேற்று காலையிலும் வழக்கம்போல் வெயில் இருந்தது. மதியம் 12 மணிக்குப்பிறகு வானம் மேகங்களால் சூழப்பட்டு இருண்டு காட்சி அளித்தது. பிற்பகல் 2.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அப்போது இடி– மின்னலுடன் 45 நிமிடம் மழை கொட்டித்தீர்த்தது.

இதனால் நாகர்கோவில் கேப்ரோடு, செட்டிகுளம் ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, கலெக்டர் அலுவலகம் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் சாக்கடையுடன் மழை நீரும் கலந்து ஓடியதால் கருப்பு நிறத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது. இதேபோல் நகரின் பல தெருக்களிலும் மழை நீர் ஆறாக ஓடியது. இந்த மழை, கோடை வெயிலில் சிக்கித் தவித்த மக்களுக்கு இதமாக இருந்தது.

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 53.2, பெருஞ்சாணி– 53.4, சிற்றார் 1– 35.4, சிற்றார் 2– 7, புத்தன் அணை– 54, பூதப்பாண்டி– 34.6, களியல்– 6.2, கன்னிமார்– 42.4, குழித்துறை– 54.2, சுருளக்கோடு– 30, தக்கலை– 1, குளச்சல்– 11.4, இரணியல்– 14.4, மாம்பழத்துறையாறு– 2, கோழிப்போர்விளை–14, அடையாமடை– 11, முள்ளங்கினாவிளை– 4, ஆனைக்கிடங்கு– 6.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
பீகாரில் வெயில் காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 61 ஆக உயர்ந்துள்ளது.
2. டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயில் - 118 டிகிரி பதிவானது
டெல்லியில் வாட்டி வதைக்கும் வெயிலின் அளவு, அதிகபட்சமாக அங்கு 118 டிகிரி பதிவானது.
3. அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் டெல்டாவில், வெளுத்து வாங்கும் வெயில் மழைக்கு ஏங்கும் பொதுமக்கள்
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும் டெல்டா பகுதிகளில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் மழைக்கு ஏங்கி வருகின்றனர்.
4. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன
தஞ்சை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
5. திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஆசிரியரின் தேர்வுகள்...