மாவட்ட செய்திகள்

அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் பல்கலைக்கழக இணை பேராசிரியர் பேச்சு + "||" + Everyone should have a book reading habit of university co-professor speech

அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் பல்கலைக்கழக இணை பேராசிரியர் பேச்சு

அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் பல்கலைக்கழக இணை பேராசிரியர் பேச்சு
அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக இணை பேராசிரியர் சுதா கூறினார்.
திருவாரூர்,

திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் மைய நூலகம் சார்்பில் உலக புத்தக தினம், புத்தக காப்புரிமை தினம் மற்றும் புத்தக அறிமுக விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் தாஸ் தலைமை தாங்கி, புத்தகங்களை வெளியிட பல்கலைக்கழக பதிவாளர் புவனேஸ்வரி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சுதா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய இளைய சமுதாயத்தில் ஒரு பகுதியினர் இணைய சேவையை பயன்படுத்துவதன் மூலம் புத்தகம் வாசிப்பதை தவிர்க்கிறார்கள். இது பிற்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். ஏனென்றால், ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் பல்வேறு தகவல்களை பெற முடியும். வரலாறுகளையும், மனிதர்்களின் உண்மை முகத்தையும் தெரிந்து கொள்ள முடியும். புத்தகம் என்பது மனிதகுலத்தின் அறிவு சொத்து. எனவே அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாணவர் நலத்துறை தலைவர் நாகராஜன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ரகுபதி, நிதிஅதிகாரி பழனி, துணை நூலகர் தனவந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி நூலகர் கல்யாணி நன்றி கூறினார்்.