மாவட்ட செய்திகள்

அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் : 2,157 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் - எடியூரப்பா அறிக்கை + "||" + A severe drinking famine in 2,157 villages - Ediyurappa report

அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் : 2,157 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் - எடியூரப்பா அறிக்கை

அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் : 2,157 கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் - எடியூரப்பா அறிக்கை
பா.ஜனதா தலைவர் எடியூரப்பா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பெங்களூரு,

கர்நாடகத்தில் 162 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆனால் முதல்-மந்திரியோ அல்லது மந்திரிகளோ மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநிலத்தில் 2,157 கிராமங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களின் மக்கள் வெளியூர்களுக்கு இடம்பெயரும் நிலையில் உள்ளனர். கர்நாடக இயற்கை பேரிடர் நிர்வாக மையத்தின் அறிக்கைப்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. அடுத்த 15 நாட்களில் நிலைமை இன்னும் படுமோசமாகிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாமல், முதல்-மந்திரி மற்றும் பெரும்பாலான மந்திரிகள் ரெசார்ட் ஓட்டலில் ஓய்வு எடுக்கிறார்கள். சிலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டனர்.

பெங்களூருவிலும் குடிநீர் பிரச்சினை தீவிரமாக உள்ளது. தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கூட்டணி ஆட்சி திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை ; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
முந்தைய கூட்டணி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
2. ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடக போலீசாருக்கு சம்பள உயர்வு; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
ராகவேந்திர அவுராத்கர் குழு பரிந்துரைப்படி கர்நாடகத்தில் போலீசாருக்கு சம்பள உயர்வு வழங்கி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
3. நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் - எடியூரப்பா பேட்டி
நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கும் போது எல்லாம் மாநிலம் மழை அல்லது வறட்சியால் பாதிக்கப்படுகிறது என்றும், நான் முதல்-மந்திரி ஆனாலே எனக்கு அக்னி பரீட்சை தான் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
4. பெங்களூரு நிகழ்ச்சியில் ஒரே மேடையில் எடியூரப்பா, சித்தராமையா!
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே மேடையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கலந்து கொண்டனர்.
5. கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் ; முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடக வெள்ள நிவாரண பணிக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.