மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் + "||" + Summer Training Course for School Students in Perambalur

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்

பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூரில் நேற்று தொடங்கியது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் மாணவ- மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய பயிற்சி 8.30 மணி வரையிலும், மீண்டும் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய பயிற்சி 6 மணி வரையிலும் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேப்பந்தட்டையிலும்...

இந்த கோடை கால பயிற்சி முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதேபோல் வேப்பந்தட்டை மினி விளையாட்டு அரங்கத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கரூர்-குளித்தலையில் தொடக்கம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கிழ் மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு கரூர் மற்றும் குளித்தலையில் தொடங்கியது.
2. கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
3. அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.
4. மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் 209 மனுக்கள் குவிந்தன
நாமக்கல் மாவட்டத்தில் 8 ரேஷன்கடைகளில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் 209 மனுக்கள் பெறப்பட்டன.
5. உணவுப்பொருள் வழங்கல் குறித்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 53 மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தாவின் உத்தரவின்படி, சிறுவாச்சூர் கிராமத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.