மாவட்ட செய்திகள்

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி + "||" + Check at the thangatamilselvan staying hotel

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
மதுரையில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், கடந்த சில தினங்களாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் தங்கிய விடுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் மற்றும் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை 4.30 மணி அளவில் தனியார் விடுதிக்கு சென்று சோதனை செய்தனர். விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியுள்ள அறை மட்டும் இல்லாமல் அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான காரிலும் சோதனை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

சோதனையின் முடிவில் பணமோ, பொருளோ எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனையின்போது தங்க தமிழ்ச்செல்வன் வெளியே சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தமபாளையம் அருகே கோம்பையில் 2 வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை; லேப்டாப், ஹார்டு டிஸ்க் பறிமுதல்
உத்தமபாளையம் அருகே கோம்பையில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் 2 வீடுகளில் சோதனை நடத்தி அங்கிருந்து லேப்டாப், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
2. குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது
குடியாத்தம் அருகே நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்று எடுத்துச்செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
3. பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல்
பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் சிக்கியது.
5. வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின
சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை தொடர்ந்து வேலூர் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியுள்ளன.