மாவட்ட செய்திகள்

விவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம் + "||" + If the bridge between Vivekananda Mandap - Thiruvalluvar statue is not set,

விவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம்

விவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம்
விவேகானந்தர் மண்டபம்–திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று குமரி அனந்தன் கூறினார்.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பாலம் அமைக்க எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்த பாலம் அமைக்கும் போது இங்குள்ள இயற்கை அழகு மற்றும் தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை கைவிட நான் கோரிக்கை விடுத்தேன். அதைத்தொடர்ந்து அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது விவேகானந்தர் மண்டபம் அருகே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அடிக்கடி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடப்பதில்லை. இதனால், திருவள்ளுவர் சிலையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிலையை தமிழக அரசு புறக்கணிப்பது போல உள்ளது. எனவே விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும். பாலம் அமைக்க ஏற்கனவே நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கான பணி தொடங்கப்படவில்லை. 

விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்த வேண்டும். இல்லையென்றால் தமிழ் அறிஞர்களாகிய நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே, மத்திய, மாநில அரசுகள் பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை