மாவட்ட செய்திகள்

இண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு + "||" + Wife strangled her neck Try to kill

இண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு

இண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு
இண்டூர் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே தளவாய்பட்டி போயர் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த கார்த்திக், மனைவி வள்ளியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி அலறி துடித்தார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கார்த்திக் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதையடுத்து அவர்கள் மயங்கி கிடந்த வள்ளியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வள்ளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார், கார்த்திக் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கணவனே, மனைவியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.