மாவட்ட செய்திகள்

கடைகளில் கஞ்சா விற்பனை? போலீஸ் அதிகாரிகள் சோதனை + "||" + Cancas sold in stores? Police officers checked

கடைகளில் கஞ்சா விற்பனை? போலீஸ் அதிகாரிகள் சோதனை

கடைகளில் கஞ்சா விற்பனை? போலீஸ் அதிகாரிகள் சோதனை
அரியலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
அரியலூர்,

அரியலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சி மாவட்ட பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் தலைமையில் அரியலூர் பஸ் நிலையத்திலும், வேலூர் மாவட்ட பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி ஆகியோர் தலைமையில் அரசு கலைக்கல்லூரி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்ட பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் தலைமையில் ரெயில் நிலையம் பகுதியிலும் சோதனையிட்டனர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள இளைஞர்களையும் பிடித்து சோதனையிட்டனர். மேற்கண்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனையிட்டதில் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பெண்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்று வந்த தகவலின் பேரில் போலீசார் மாறுவேடத்தில் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் கஞ்சா எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. அரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
அரூரில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான 4 வணிக நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
2. திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம்: கொள்ளையன் சுரேசுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அதிகாரிகள் விசாரணை
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. நாமக்கல் தனியார் பள்ளி, ‘நீட்’ பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை
நாமக்கல் தனியார் பள்ளி மற்றும் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையங்களில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நீடித்தது. இதில் ரூ.150 கோடி வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
4. நாமக்கல்லில் பரபரப்பு பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை
நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.30 கோடி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
5. பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை: கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சோதனையின் போது கடை உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...