மாவட்ட செய்திகள்

நக்கம்பாடி சிவன் கோவில் கும்பாபிஷேகம் + "||" + Nambambadi Shiva Temple Kumbabishekam

நக்கம்பாடி சிவன் கோவில் கும்பாபிஷேகம்

நக்கம்பாடி சிவன் கோவில் கும்பாபிஷேகம்
கோவில் சிதிலமடைந்ததால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கோவிலை சீரமைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினர்.
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், பெருமாள் ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளன. இந்த கோவில் சிதிலமடைந்ததால் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கோவிலை சீரமைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 15-ந் தேதி தொடங்கி தினமும் காலை, மாலை என 6 கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை சிவன், விநாயகர், பெருமாள் ஆகிய சாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.