மாவட்ட செய்திகள்

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் + "||" + Consultative meeting at Arakonam Taluk office

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரக்கோணம், 

ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எண்ணும் மையத்தில் வருவாய்த்துறையினர் விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மற்றும் செயல்விளக்க பயிற்சி நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரும், அரக்கோணம் தொகுதி தேர்தல் அலுவலருமான வேணுசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார்.

கூட்டத்தில் வாக்குப்பதிவு எண்ணும் போது வருவாய்த்துறை அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அரசின் விதிமுறைகளை எவ்வாறு கடைபிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துணை தாசில்தார் அருள்செல்வம், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.