மாவட்ட செய்திகள்

பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை + "||" + In Bangalore Rain with strong winds

பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை

பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை
பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
பெங்களூரு,

கர்நாடகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்துவதும், மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்வதும் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்தது. மதியம் 1.45 மணியவில் திடீரென கருமேங்கள் ஒன்றுகூடி மழை கொட்டி தீர்த்தது.

கப்பன்பார்க், சாந்திநகர், வில்சன் கார்டன், கோரமங்களா, ஹெப்பால், எம்.ஜி.ரோடு, ராஜாஜிநகர் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் மழைநீர் புகுந்து பாதிப்புகளை உண்டாக்கியது.

காற்று பலமாக வீசியதால் வில்சன் கார்டன், ஜெயநகர், மல்லேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மழை காரணமாக சில்க்போர்டு, டெய்ரி சர்க்கிள், பன்னரகட்டா உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தவிப்புக்கு ஆளாகினர். மழை காரணமாக நகரில் நேற்று குளிர்ச்சியான காற்று வீசியது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது ரூ.90 லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு
பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர் களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் நகர்வலம் மெட்ரோ ரெயில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு
பெங்களூருவில் நகர்வலம் மேற்கொண்ட முதல்-மந்திரி எடியூரப்பா, மெட்ரோ ரெயில் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
3. பெங்களூருவில், அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.எப்.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.எப்.எஸ். அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பெங்களூருவில் சுதந்திரதின விழா: கர்நாடக மாநிலத்தில வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை, முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
பெங்களூருவில் சுதந்திரதின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது கர்நாடகத்தில் வேலைவாய்ப்புகளில் கன்னடர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
5. பெற்றோர்களே உஷார்... பெங்களூருவில் குழந்தைகளுக்கு வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்
பெங்களூருவில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.