மாவட்ட செய்திகள்

பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு + "||" + Parents can ask irresponsible teachers to ask the District Principal Educational Officer

பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர் கேள்வி கேட்கலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தாத பொறுப்பற்ற ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
திருவண்ணாமலை,

தானிப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 1994-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. இதில் தான், கல்வி அதிகாரிகளான எங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே கடமை, பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்.

கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா? என பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறையின்றி பொறுப்பில்லாமல் இருக்கும் ஆசிரியர்களை பெற்றோர்கள் கேள்வி கேட்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது.

பள்ளியின் வளர்ச்சிக்கு மாணவர்களின் பெற்றோரும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். அவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியோர் பள்ளி நிர்வாக வளர்ச்சியில் ஒரு உறுப்பினராக பார்க்க வேண்டும்.

100 சதவீத தேர்ச்சி

இந்த பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மிகவும் பின்தங்கி உள்ளது. இனிவரும் கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் குறைவானதற்கு ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க வேண்டும். இதை உணர்ந்து இனி வருங்காலங்களில் 100 சதவீத தேர்ச்சிக்கு ஆசிரியர்கள் உழைக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் இருந்தால் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் தங்களது பள்ளி வாழ்க்கையில் நடந்த இனிமையான நினைவுகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் முன்னாள் மாணவர்கள் ரூ.2 லட்சம் நிதியை பள்ளிக்கு அளித்து குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இனி வருங்காலங்களிலும் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவோம் என உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் சிறப்பம்சமாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பாடம் கற்பித்த முன்னாள் ஆசிரியர்களையும்அழைத்து வந்து, நிகழ்ச்சியில் கவுரவித்தனர். இதில் சுமார் 200 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் அருண், சங்கர், கலையரசு ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வெண்ணந்தூர் கூட்டுறவு வங்கியில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தயானந்த் கட்டாரியா ஆய்வு செய்தார்.
2. நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக செயல்பட்டால் 1+1 என்பது 11 ஆக இருக்கும்; பிரதமர் மோடி பேச்சு
நரேந்திரா, தேவேந்திரா ஒன்றாக இணைந்து செயல்பட்டால் 1+1 என்பது 2 அல்ல 11 ஆக இருக்கும் என பிரதமர் மோடி மராட்டிய தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
3. பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் ‘‘மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது’’ - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
‘‘பொய் மூட்டைகளால் மக்களை ஏமாற்றும் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது‘‘ என்று நாங்குநேரி பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
4. அனைவரும் மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு
அனைவரும் மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.
5. கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்தது தர்மபுரி மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
கம்யூனிஸ்டுகளின் ஆட்சியால்தான் சீனா வல்லரசாக உயர்ந்து உள்ளது என்று தர்மபுரியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.