மாவட்ட செய்திகள்

நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததை கண்டித்ததால் சகோதரியின் திருமணம் நடந்த 3–வது நாள் வாலிபர் தற்கொலை + "||" + The 3rd day younger sister of the sister's marriage was committing suicide because she condemned the drinking of friends

நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததை கண்டித்ததால் சகோதரியின் திருமணம் நடந்த 3–வது நாள் வாலிபர் தற்கொலை

நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததை கண்டித்ததால் சகோதரியின் திருமணம் நடந்த  3–வது நாள் வாலிபர் தற்கொலை
நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்ததை தந்தை கண்டித்ததால், சகோதரியின் திருமணம் நடந்த 3–வது நாள் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தென்தாமரைகுளம்,

தென்தாமரைகுளம் அருகே உள்ள காட்டுவிளையை சேர்ந்தவர் அருள்சேகர் (வயது 52). இவருக்கு ஒரு மகளும், சுபின் (21) என்ற மகனும் இருந்தனர். சுபின் பாலிடெக்னிக் படித்தவர். வேலைக்கு முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுபினின் சகோதரிக்கு  திருமணம் நடைபெற்றது. திருமணவிழாவுக்கு சுபினின் நண்பர்கள்        பலர்   வந்திருந்தனர். அவர்கள் மது விருந்து கேட்டதாகவும், அதற்கு சுபின் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது அருள்சேகருக்கு தெரிய வந்ததும், அவர் மது விருந்து கொடுத்ததற்காக சுபினை கண்டித்ததாக தெரிகிறது. அப்போது அங்கு சுபின் நண்பர்கள் இருந்துள்ளனர் இதனால் மனவேதனை அடைந்த சுபின், வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி அருள்சேகர் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
பண்ருட்டியில் முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
3. கடன் தொல்லையால் வி‌‌ஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை வேதாரண்யத்தில் பரிதாபம்
வேதாரண்யத்தில் கடன் தொல்லையால் வி‌‌ஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
4. ராயப்பேட்டை வணிக வளாகத்தில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு தம்பியை காப்பாற்றியவருக்கு நேர்ந்த சோகம்
ராயப்பேட்டை வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மயங்கி விழுந்த தம்பியை காப்பாற்றிய வாலிபர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. கூடலூரில் பரிதாபம்: அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை
கூடலூரில் அரசு பஸ் கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-