மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்த நர்சு பரிதாப சாவு + "||" + Near Pavoorcathram nurses died from drinking poisoned

பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்த நர்சு பரிதாப சாவு

பாவூர்சத்திரம் அருகே விஷம் குடித்த நர்சு பரிதாப சாவு
பாவூர்சத்திரம் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் குடித்த நர்சு பரிதாபமாக இறந்தார்.
பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன்குளத்தைச் சேர்ந்தவர் பூதப்பாண்டி. இவருடைய மகள் சங்கரகோமதி (வயது 21). இவர் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக பூதப்பாண்டிக்கும், சங்கரகோமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த பூதப்பாண்டி, சங்கரகோமதியை கண்டித்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சங்கரகோமதி வேலைக்கு சென்றார்.

பின்னர் அவர், வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக ஆவுடையானூர் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். அங்கு அவர், விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரகோமதி நேற்று அதிகாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு பஸ் மோதி வாலிபர் பலி
அரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
2. ஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம்; 25 பேர் பலி - மீட்பு பணி தீவிரம்
ஜப்பான் நாட்டில் ‘ஹிகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
3. கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ - வாலிபர் பலி: தீயணைப்பு வீரர்கள் காயம்
கிராண்ட் ரோடு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வாலிபர் பலியானார். தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
4. மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; கல்லூரி மாணவர் பலி தாயாருக்கு தீவிர சிகிச்சை
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். உடன் வந்த தாயாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி
கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியானார்.

ஆசிரியரின் தேர்வுகள்...