மாவட்ட செய்திகள்

காரைக்குடி- திருவாரூர் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பேட்டி + "||" + The Trichy Railway manager interviewed the Karaikudi-Tiruvarur Railway service soon

காரைக்குடி- திருவாரூர் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பேட்டி

காரைக்குடி- திருவாரூர் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்படும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் பேட்டி
காரைக்குடி- திருவாரூர் ரெயில்சேவை விரைவில் தொடங்கப்படும் என்று, திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அஜய்குமார் கூறினார்.
திருவாரூர்,

திருவாரூர்் ரெயில் நிலையத்தில் அடிப்படை தேவைகள் குறித்து திருச்சி கோட்ட மேலாளர்் அஜய்குமார் ஆய்வு செய்தார். அவருடன் ரெயில்வே கோட்ட முதுநிலை மேலாளர்் (இயக்கம்) பூபதிராஜா, முதுநிலை வணிக மேலாளர் நரேன் ஆகியோர் இருந்தனர். அப்போது அவர் ரெயில் நிலையத்தில் வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர்் அஜய்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர்-திருச்சி இடையே விரைவில் பயணிகள் ரெயில்சேவை தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில்

விரைவில் அதிகாலை மற்றும் இரவில் திருச்சியில் இருந்து திருவாரூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

பயணிகளின் பாதுகாப்புக்காக திருவாரூர் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். காரைக்குடி- திருவாரூர் இடையே அகலரெயில் பாதை பணிகள் முடிந்து விட்டதால் இந்த வழித்தடத்தில் விரைவில் பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நிர்வாகிகள் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர்் அஜய்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

ஜூன் 1-ந்் தேதி (சனிக்கிழமை) முதல் திருவாரூர்- காரைக்குடி ரெயில் சேவையை தொடங்க வேண்டும். அதிகாலையிலும், மாலை 6.30 மணிக்கு மேல் திருவாரூரிலிருந்து திருச்சிக்கும், மாலை 6.30 மணிக்கு பிறகு திருச்சியிலிருந்து திருவாரூருக்கு ஒரு ரெயிலும் இயக்க வேண்டும். காரைக்குடி- திருவாரூர் வழித்தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில் இயங்கிய ரெயில்களை மீண்டும் இயக்குவதுடன் தாம்பரம் முதல் ராமேஸ்வரம் வரை ஒரு அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும்.

திருவாரூர் ரெயில் நிலையத்தின் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் பாதுகாப்பாக அமர்்வதற்கு இருக்கைகளும், கழிவறை வசதி செய்து தர வேண்டும். ரெயில் நிலையத்தில் முகப்பில் அனைவருக்கும் தெரியும் வகையில் பெயர்் பலகை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர், திருவாரூர் ரெயில் நிலையத்தில் ஏராளமான இட வசதிகள் இருப்பதால் வணிக வளாகம், பயணியர் தங்கும் அறை போன்றவை கட்டினால் ரெயில்வேக்கு வருமானம் அதிகரிக்கும் என்பதால் ஆவண செய்யப்படும் என கூறினார்.