மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை + "||" + The borrower, the jeweler of the jeweler who was in the car, burned and committed suicide

கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை

கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர், தீக்குளித்து தற்கொலை
கடன் தொல்லையால், காருக்குள் இருந்தபடி நகைக்கடை உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 42). இவர் நாகை மாவட்டம், வாய்மேடு பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் ரூ.60 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடனை அடைக்க ஒரே வழி தனது குடும்பத்தினருடன் தான் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று செந்தில்குமார், தனது மனைவி மகாலெட்சுமி மற்றும் மகன், மகளுடன் காரில் வெளியே சென்றுள்ளார். காரில் சென்றபோது அவர், தனக்கு கடன் அதிகமாக உள்ளதால் நாம் அனைவரும் குடும்பத்துடன் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார். அதைக்கேட்டதும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் கதறி அழுதுள்ளனர்.

தீக்குளித்து தற்கொலை

இதனால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முடிவை செந்தில்குமார் கைவிட்டார். பின்னர் அவர்களை எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்த அவர், மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோரை வீட்டில் இறக்கி விட்டு விட்டு அதே காரில் முத்துப்பேட்டை அருகே பாண்டி சத்திரம் என்ற இடத்திற்கு வந்துள்ளார்.

அங்கு காரை நிறுத்தி விட்டு காருக்குள் இருந்தபடியே தனது உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொண்டார். கார் தீப்பற்றி எரிந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் செந்தில்குமார் தீயில் கருகி கரிக்கட்டையாக கிடந்தார். காரும் எரிந்து நாசமானது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோதிவ்யன், இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சிவந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் நகைக்கடை உரிமையாளர் காருக்குள் அமர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்த பெண் கைது; தற்கொலை நாடகம் நடத்தியது அம்பலம்
மதுரை அருகே கள்ளக்காதலனை கொலை செய்து எரித்து தற்கொலை நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
2. வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3. காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை, துணை ராணுவ வீரரின் உடல் கூடலூரில் அடக்கம்
காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட துணை ராணுவ வீரரின் உடல் கூடலூர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
4. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: கல்லூரி மாணவி தற்கொலை புதுக்கடை அருகே பரிதாபம்
புதுக்கடை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
5. திருமணமாகி ஒரு மாதத்தில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
திருமணமாகி ஒரு மாதத்திலேயே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை