மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி + "||" + AIADMK in Tamil Nadu Interview with Dr Dhammani Ramadoss

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தர்மபுரி,

பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி ராஜாபேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி இந்தியாவை வலிமைமிக்க வல்லரசாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

விவாதிப்போம்

எனக்கு வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக என்னை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த தர்மபுரி தொகுதி மக்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன். மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நான் குரல் கொடுப்பேன்.

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டம், நீர் மேலாண்மை திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை ஆகியவற்றை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து பா.ம.க.வின் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி விரைவில் விவாதிப்போம்.

தமிழகத்தின் நலனுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும். இந்த நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள், உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் உலக சாம்பியனில் தங்கம் வென்ற வீரர் பேட்டி
சிலம்ப போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று உலக சாம்பியன் சிலம்ப போட்டியில் தங்கம் வென்ற வீரர் கூறினார்.
2. ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது இல.கணேசன் பேட்டி
ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது நாட்டிற்கு ஆபத்தானது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் கூறினார்.
3. அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் கலெக்டர் டி.ரத்னா பேட்டி
அரியலூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுத்து செயல்படுத்தப்படும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ரத்னா தெரிவித்துள்ளார்.
4. தமிழகத்தில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு பொது சுகாதாரத்துறை இயக்குனர் பேட்டி
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
5. நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் வானதி சீனிவாசன் பேட்டி
நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.