மாவட்ட செய்திகள்

2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம் + "||" + 2 women commit suicide Pity in different events

2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்

2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்
சோளிங்கர், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சோளிங்கர், 

சோளிங்கரை அடுத்த அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் சோளிங்கரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் ரம்யா (வயது 23) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லையே என்ற ஏக்கம் ரம்யாவை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அருகில் உள்ள மாமரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர் மோகனவேலு. இவரது மனைவி திலகவதி (29). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திலகவதி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த திலகவதி மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த திலகவதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
3. செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு அரசு அதிகாரி தீக்குளித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
வேலூரில் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் அரசு அதிகாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. காஞ்சீபுரத்தில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை; ஆட்டோவை போலீஸ் அனுமதிக்காததால் விபரீதம்
காஞ்சீபுரம் நகருக்குள் ஆட்டோக்களை அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த ஆட்டோ டிரைவர் நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.