மாவட்ட செய்திகள்

மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு + "||" + Fishermurthi police station was previously fascinated by the PMK who tried to get off the road

மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு

மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு
மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற பா.ம.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
மீன்சுருட்டி,

சமூக வலைதளங்களில் ஒன்றான டிக்-டாக்கில் ஒரு சமுதாயத்தினரை இழிவாக பேசி மிரட்டும் வகையில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் கிராமத்தில் வசிக்கும் மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு உள்ள சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

குண்டர் சட்டம் பாயும்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீசார், உடனே அங்கு சென்று போராட்டம் நடத்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் டிக்-டாக்கில் அவதூறு பதிவு செய்தவரை கைது செய்வோம் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை உண்டாக்கும் வகையில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் எச்சரித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் நாகை அருகே நடந்தது
நாகை அருகே தனி சுடுகாடு அமைத்து தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி விருத்தாசலத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் மறியல்
சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஜல்லிக்கட்டில் பங்கேற்க டோக்கன் வழங்காததால் காளைகளுடன் அதன் உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
4. பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாவு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
வேடசந்தூர் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி இறந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
5. தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.